உங்கள் நம்பிக்கை உங்கள் கலாச்சாரமாக மாறட்டும்
கிழக்கு திமோரின் தலைநகர் டிலியில் (Dili) உள்ள அரசுத்தலைவர் மாளிகையில் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுநிலை அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய அருளுரை.
அன்புள்ள சகோதரர் சகோதரிகளே, ஆசியாவில் பிறந்த கிறித்தவம், ஐரோப்பிய மறைப்பணியாளர்கள் வழியாக, இந்தத் தொலைதூர கண்டத்தின் பகுதிகளுக்கு வந்து, அதன் உலகளாவிய இறையழைத்தல் மற்றும் மிகவும் மாறுபட்ட கலாச்சாரங்களுடன் இணக்கமாக இருக்கும் திறனை உறுதிப்படுத்துகிறது. இது நற்செய்தியை எதிர்கொள்ளும் போது உயர்ந்த மற்றும் ஆழமான ஒரு புதிய ஒருங்கிணைப்பைக் காண்கிறது.
இயற்கை வளம் கொழிக்கும் இந்த நாடு, ஆன்மாவில் அமைதி மற்றும் மகிழ்ச்சியின் உணர்வுகளைத் தூண்டும் ஒரு நிலமாக, கடந்த காலங்களில் ஒரு துயரமிகுந்த காலகட்டத்தை கடந்துள்ளது. மேலும் அது எழுச்சியையும் வன்முறையையும் அனுபவித்திருக்கிறது, மக்களின் சுதந்திரத்திற்கான ஒரு தேடல் நிறைந்த இந்தக் காலங்களைப் பார்க்கும்போது, சுயாட்சிக்கான அதன் தேடலை நிராகரிக்கவோ அல்லது முறியடிக்கவோ மட்டுமே இது அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது என்பதைக் காண முடிகிறது
Comments are closed.