இறைவனின் அன்புகூரும் முறையைப் பின்பற்றுவோம்

தன்னலமின்றி செயல்படும் இறைவனின் அன்புகூரும் முறையைப் பின்பற்றியதாக நம் அனைவரின் அன்பு நடவடிக்கைகளும் இருக்கவேண்டும் என மே மாதம் 4ஆம் தேதி சனிக்கிழமையின் டுவிட்டர் குறுஞ்செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் அன்பிற்குப் பதில்மொழி வழங்க இயலாத மனிதர்களையும் அன்புச் செயலால் ஆட்கொள்வது என்பது கடவுளின் தன்னலமற்ற அன்புமுறையை நாம் பின்பற்றுவதிலிருந்து கற்றுக்கொள்வதாகும் என தன் செய்தியில் திருத்தந்தை கூறியுள்ளார்.  

2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் இதுவரை, 5416 ஆங்கிலக் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தை இதுவரை 1 கோடியே 85 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்.

Comments are closed.