ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
செபமாலை மாதமான இந்த அக்டோபர் மாதம் முழுவதும் நாம் செபமாலை மணிகளால் மாதாவை மகிமைப்படுத்திட வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில் “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார். கேட்பதிலும், தேடுவதிலும், தட்டுவதிலும் பின்புலமாக ஆதாரமாக இருப்பது நம்பிக்கை என்னும் விசுவாசமே ஆகும். நம் விண்ணகத் தந்தையிடம் விசுவாசத்தோடு கூடிய விண்ணப்பங்களை வைக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில், “பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?” என இயேசு கேட்கிறார். இறைவன் நமக்கு அளிப்பதெல்லாம் நமக்கு உகந்த ஒன்றேயாகும் என்பதை உணர வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
இஸ்ரேல் – பாலஸ்தீனம் பகுதிகளில் தற்போது நடந்துவரும் சண்டையில் இறந்த ஆயிரக்கணக்கான மக்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காகவும், அங்கு அமைதி மீண்டும் திரும்ப வேண்டியும் இந்த. நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று, நோயுற்ற குழந்தைள் அனைவரையும் நம் குழந்தை இயேசு தொட்டு குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.