வாசக மறையுரை (நவம்பர் 24)

பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம்
புதன்கிழமை
I தானியேல் 5: 1-6, 13-14, 16-17, 27-28
II லூக்கா 21: 12-19
இயேசுவுக்குச் சான்று பகரக் கிடைக்கும் வாய்ப்பு
இயேசுவுக்குச் சான்று பகர்ந்து உயிர்துறந்த பெண்கள்:
மற்ற நாடுகளில் நற்செய்தியை அறிவிப்பதைப் போன்று, சீனாவில் அவ்வளவு எளிதாக நற்செய்தி அறிவித்துவிட முடியாது. கம்யூனிச நாடான சீனாவில் நற்செய்தியை அறிவிப்பதற்கு இன்றைக்கும் நிறையக் கட்டுப்பாடுகள் உண்டு.
இது நடந்தது 2004, ஜூன் 17 அன்று. ஜியாங் சாஞ்சியு (Jiang Zongxiu) என்ற முப்பத்து நான்கு வயதுப் பெண்மணியும், அவருடைய மாமியாரும் கையில் கொஞ்சம் திருவிவிலியங்களை வைத்துக்கொண்டு, அருகிலுள்ள கடைத்தெருப் பக்கம் சென்று, மக்களுக்குத் திருவிவிலியத்தைக் கொடுத்துக்கொண்டே, இயேசுவைப் பற்றி அறிவிப்பது உண்டு. இதை அவர்கள் பல நாள்களாகச் செய்து வந்தார்கள்.
அன்றும் அவர்கள் கடைத்தெருப் பக்கம் சென்று, மக்களுக்குத் திருவிவிலியத்தைக் கொடுத்துக்கொண்டே, இயேசு கிறிஸ்துவைப் பற்றி உற்சாகமாக அறிவித்து வந்தார்கள். இதை அங்கு வந்த சீன அதிகாரிகள் பார்த்துவிட்டு, அவர்கள் இருவரையும் கைது செய்தார்கள். தாங்கள் கைதுசெய்யப்பட்டதை நினைத்து, ஜியாங் சாங்சியும் அவருடைய மாமியாரும் வருந்தவில்லை. மாறாக, அதை மனமுவந்து ஏற்றுக்கொண்டார்கள். இதற்குப் பிறகு கைது செய்யப்பட்ட அவர்கள் இருவரும் சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்டார்கள். அங்கே அவர்கள் இருவரும் கடுமையாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்கள்.
ஆம், ஜியாங்கிற்கும் அவருடைய மாமியாருக்கும், இயேசுவைப் பற்றி மக்களுக்கு அறிவிப்பதால், தங்களுக்கு எதுவும் நடக்கலாம் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. அப்படியிருந்தும், அவர்கள் துணிவோடு இயேசுவைப் பற்றி நற்செய்தி அறிவித்து, அவருக்குச் சான்று பகர்ந்தார்கள். இன்றைய நற்செய்தியில் இயேசு, ஆட்சியாளர்கள், அதிகாரிகள் முன்பு நீங்கள் இழுத்துச் செல்லப்படும்போது, அது நீங்கள் என்னைப் பற்றிச் சான்று பகர்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று தன் சீடர்களிடம் கூறுகின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
எருசலேம் திருக்கோயிலின் அழிவைப் பற்றி இயேசு முன்னறிவிக்கின்றபோது, அது எப்போது நடக்கும், அதற்கான அறிகுறிகள் என்ன என்பன பற்றிச் சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்குப் பதிலளிக்கையில்தான் இயேசு, தன் சீடர்களிடம் அந்நாள்களில் நீங்கள் என் பெயரின் பொருட்டு அரசரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்லப்படுவீர்கள். அது என்னைப் பற்றிச் சான்று பகர்வதற்கு உங்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்கிறார். தொடர்ந்து அவர் அவர்களிடம், என்னைப் பற்றிச் சான்று பகர்கையில் உங்களுக்குப் பலவிதமான துன்பங்கள் வரலாம். ஆனாலும், மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வைக் காத்துக் கொள்ளுங்கள் என்கிறார்.
தானியேல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், ஆண்டவருக்கு எதிராகவும், அவருடைய மக்களுக்கு எதிராகவும், அவருடைய இல்லத்திற்கு எதிராகவும் செயல்பட்ட நெபுகத்னேசரின் மகனான பெல்சாட்சரின் அழிவு முன்னறிவிக்கப்படுகின்றது. ஆம், ஆண்டவருக்கு எதிராகச் செயல்படுவோருக்கு அழிவே மிஞ்சும். ஆதலால், ஆண்டவரின் மக்களுக்கு எதிராகச் செயல்படுவோரை ஆண்டவர் பார்த்துக்கொள்வார் என்பதால், நாம் அவருடைய பணியை மன உறுதியோடு செய்து, அவருக்குச் சான்று பகர்வோம்.
சிந்தனைக்கு:
 இயேசுவுக்குச் சான்று பகர்வது என்பது அவருக்காக உயிரையும் தருவது.
 சவால்கள் உண்டு என்பதற்காக இயேசுவைப் பற்றிச் சான்று பகர நாம் மறக்க வேண்டாம்.
 ஆண்டவர் தன் அடியார்களை ஒருபோதும் கைவிட மாட்டார்.
இறைவாக்கு:
‘என் பொருட்டு, மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே!’ (மத் 5:11) என்பார் இயேசு. எனவே, நாம் இயேசுவைப் பற்றித் துணிவுடன் சான்று பகர்ந்து இறையருளை

Comments are closed.