புனித யாகப்பர் ஆலயத்தின் மீது விமானக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் 28ம் ஆண்டு நினைவுகள்”

எமது குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது விமானக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதன் 28ம் ஆண்டு நினைவுகள்”
குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது அரச விமானக் குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதன் 28ம் ஆண்டு நினைவஞ்சலி 13/11/2021 சனிக்கிழமை காலை பங்குத்தந்தை தலைமையிலான திருப்பலியின் நிறைவில் ஆலயத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் சுடரேற்றி நினைவுகூறப்பட்டது.
1993ம் ஆண்டு நவம்பர் மாதம் 13ம் நாள் அதிகாலையில் இலங்கை அரச விமானக் குண்டுத் தாக்குதல் புனித யாகப்பர் ஆலயத்தின் மீது நடாத்தப்பட்டது. இதில் ஆலயத்தில் வழிபாட்டிற்கென ஒன்றுகூடியிருந்த 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பெரும் பழமைவாய்ந்த கலைநயமிக்க எமது ஆலயமும் பெரும் சிதைவிற்குள்ளானது.

Comments are closed.