அவரின் உற்றுநோக்கு நம் இதயங்களுக்குச் செல்கிறது
உரோம் நேரம் மாலை ஐந்து மணிக்கு, தூரின் நகர் பேராலயத்தில் பொது மக்களுக்குத் திறக்கப்படுவதை முன்னிட்டு, இயேசுவின் திருமுகம் குறித்து தன் டுவிட்டர் செய்தியில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
காயங்களால் உருக்குலைந்துள்ள திருமுகம், மாபெரும் அமைதியை வெளிப்படுத்துகிறது. விசுவாசம் கொள்ளுங்கள், நம்பிக்கையை இழக்க வேண்டாம் எனச் சொல்வதுபோல், அவரின் உற்றுநோக்கு, நேரிடையாக, நம் கண்களுக்கு அல்ல, மாறாக, நம் இதயங்களுக்குச் செல்கிறது, கடவுளின் அன்பின் சக்தி, உயிர்த்த ஆண்டவரின் வல்லமை, எல்லாப் பொருள்களையும் விஞ்சி நிற்கிறது என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டரில், #HolyShroud என்ற ஹாஷ்டாக்குடன் வெளியாயின.
இயேசுவின் திருஉடலை போர்த்தியிருந்த திருத்துணியின் முன்பாக நடைபெறும் வழிபாட்டை, https://www.youtube.com/watch?v=VJHI8bI0LWg என்ற யூடியூப் முகவரி வழியாகப் பங்கு கொள்ளுங்கள். இந்த திருத்துணியின் மனிதரை நாம் நோக்குவோம், அவரில், ஆண்டவரின் ஊழியரின் தோற்றங்களை கண்டு கொள்கிறோம் என்றும் திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்துள்ளார்
Comments are closed.