யாழில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று,மேலும் ஒருவர் உயிரிழப்பு…!
யாழ்ப்பாணத்தில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே யாழ்ப்பாணத்தில் இன்று ஒரு கொரோனா தொற்றாளர் அடையாளங்காணப்பட்ட நிலையிலேயே மேலும் இருவர் அடையாளங்காணப்பட்டுள்ளனர்
இன்றைய தினம் 10 பேர் கொரோனா ஆய்வுகூட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் அவர்களுள் இருவரே இவ்வாறு அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் யாழ்ப்பாணத்தில் ஆராதனை நடத்திய போதகருடன் நேரடி தொடர்பிலிருந்தவர்கள் எனவும் பலாலி தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த நிலையிலேயே இன்று ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மற்றொருவர் உயிரிழந்துள்ளார்.
72 வயதுடைய மருதானை பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதியானது.
இந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்
Comments are closed.