தொழில்நுட்பம் நமது கிறிஸ்தவ நம்பிக்கையை வாழ உதவும்!
செயற்கை நுண்ணறிவு, நமது காலத்தின் வரையறுக்கும் குறிக்கோளாக மாறிவிட்டது என்றும், பாதுகாப்பு என்பது செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல, கல்வி மற்றும் தனிப்பட்ட பொறுப்பு மூலம் நலம்தரும் முடிவுகளை எடுக்க மக்களுக்கு வலிமை அளிப்பதும் ஆகும் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நவம்பர் 21, இவ்வெள்ளியன்று, அமெரிக்காவின் இண்டியானாபொலிஸில் இடம்பெற்ற தேசியக் கத்தோலிக்க இளைஞர் மாநாட்டில் (NCYC) கலந்து கொண்ட 15,000-க்கும் மேற்பட்ட இளையோரை காணொளி இணைப்பில் சந்தித்து உரையாடியபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, ஒவ்வொரு கருவியும் நமது நம்பிக்கை மற்றும் அறிவுசார் வளர்ச்சிப் பயணத்தைத் தடுக்காமல் அவற்றின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும் என்று கூறினார்.
Katie Prejan McGrady அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட இந்த நிகழ்வில், ஆறு இளம் கத்தோலிக்கர்கள், அருளடையாளங்கள் மற்றும் மனநலம் முதல் செயற்கை நுண்ணறிவு மற்றும் திருஅவையின் எதிர்காலம் வரையிலான தலைப்புகளில் திருத்தந்தையுடன் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
Comments are closed.