கடவுள் திருஅவைக்கு பண்பாட்டு அடையாளத்தைக் கொடுத்தார்
நமது காலம், வறுமையின் வலிகள், சமூகப் பிரிவினைகள், புதிய தொழில்நுட்பங்களின் சவால்கள் மற்றும் அமைதிக்கான உண்மையான ஏக்கங்கள் யாவும் தொடர்ந்து புதிய மாவாக அரைக்கப்பட்டு, கெட்ட நொதியுடன் புளிக்கவைக்கும் ஆபத்தில் இருக்கும் ஓர் ஆலைக்கல்லாக நமக்குக் காட்சியளிக்கிறது என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
மெக்ஸிகோவில் நடைபெறும் Puebla de los Ángeles -இன் பதினேழாவது தேசிய மாநாட்டின் பங்கேற்பாளர்களுக்கு நவம்பர் 7, வெள்ளியன்று வழங்கியுள்ள செய்தியொன்றில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, விசுவாசத்தின் விடியலில், கடவுள் திருஅவைக்கு ஒரு முழுமையான பண்பாட்டு அடையாளத்தைக் கொடுத்தார் என்று உரைத்ததுள்ளார்.
திருஅவையின் மறைபரப்பு பணிக்கு இறைவேண்டல், தியாகங்கள் மற்றும் பொருள் பங்களிப்புகள் வழியாக பங்கேற்பாளர்களின் ஆதரவிற்காக நன்றி தெரிவித்துக்கொண்ட திருத்தந்தை, அவர்களின் முயற்சிகள் உலகளவில் நற்செய்தி அறிவிப்பதற்கு உதவுகின்றன என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
மத்தேயு நற்செய்தியில் (மத் 13:33) இடம்பெறும் புளிப்பு மாவு உவமையை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, புளிப்பு மாவு நற்செய்தியைக் குறிக்கிறது, இது மாவில் உள்ள நொதி போல, கலாச்சாரங்களையும் மக்களையும் அவர்களின் அடையாளத்தை அழிக்காமல் உள்ளிருந்து மாற்றுகிறது என்பதை விளக்குகிறது என்று விளக்கியுள்ளார்.
இந்த மாற்றத்தை மெக்சிகோவின் நற்செய்தி அறிவிப்புப் பணியுடன் இணைத்துக் கூறிய திருத்தந்தை, அங்கு நம்பிக்கை ஏற்கனவே இருந்த கலாச்சாரங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டது, என்றும் இது குவாடலூப் அன்னை கன்னி மரியாவின் காட்சியில் அடையாளப்படுத்தப்பட்டது, இது ஒரு வலிமைவாய்ந்த கலாச்சார உருவமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Comments are closed.