நம்பிக்கையின் சக்திவாய்ந்த ஆதாரம் ஒருங்கிணைப்பு
ஒருங்கிணைப்பு அனைத்து மனிதகுலத்திற்கும் நம்பிக்கையின் சக்திவாய்ந்த அடையாளமாக மாறுகிறது என்றும், மதம் என்பது மோதலின் ஆதாரம் அல்ல, மாறாக குணப்படுத்துதல் மற்றும் நல்லிணக்கத்தின் ஆதாரம் என்பதை வெளிப்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 17 புதன்கிழமை முதல் 18 வியாழன் வரை கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெறும் உலக மற்றும் பாரம்பரிய மதங்களின் தலைவர்களுக்கான எட்டாவது மாநாட்டில் பங்கேற்பாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
வன்முறை மோதல்களால் குறிக்கப்பட்ட இக்காலத்தில், மதங்களுக்கு இடையிலான உரையாடலின் முக்கிய பங்கை இம்மாநாடானது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும், உடைந்த மற்றும் காயமடைந்த நமது உலகை குணப்படுத்துவதற்கான பொதுவான விருப்பத்தில் ஒன்றிணைந்து, நட்பை புதுப்பிக்கவும், புதியவற்றை உருவாக்கவும் உலகின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வந்து கூடியிருப்பதற்காக நன்றி கூறினார் திருத்தந்தை.
“மதங்களின் உரையாடல் – எதிர்காலத்திற்கான ஒருங்கிணைப்பு” என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இம்மாநாடானது, இறைத்தன்மையுடன் ஒவ்வோர் உண்மையான மத உந்துதலையும், தனிநபர்களையும் நாடுகளையும் பிணைக்கும் ஒருவருக்கொருவர் சார்ந்திருத்தல் பற்றிய நமது உள்ளார்ந்த விழிப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்ட உரையாடலையும் ஒத்துழைப்பையும் வளர்க்கிறது என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
Comments are closed.