சிறந்த அன்பின் செயலாகக் கருதப்படும் கீழ்ப்படிதல்
கீழ்ப்படிதல் என்பது மற்றவர்களுக்குச் சுறுசுறுப்பாகவும் தாராளமாகவும் செவிசாய்ப்பது என்ற அதன் ஆழமான அர்த்தத்தில், ஒரு சிறந்த அன்பின் செயலாகக் கருதப்படுகின்றது என்றும், இதன் மூலம் நம் சகோதர சகோதரிகள் வளர்ந்து வாழ முடியும் என்பதற்காக நாம் நம்மை நாமே இழப்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்றும் கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
செப்டம்பர் 18, வியாழனன்று வத்திக்கானில் இவ்வாண்டு தங்களது சபையின் பொதுப்பேரவை மற்றும் மன்றங்களை சிறப்பிக்கும் துறவற சபையாரைச் சந்தித்தபோது இவ்வாறு கூறினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
துறவற வாழ்வு, கீழ்ப்படிதல், காலத்தின் அறிகுறிக்கேற்ற பணி என்ற தலைப்பில் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை அவர்கள், துறவற சபையினர் நடத்தும் பொதுப்பேரவைகள், திருஅவையின் சிறந்த கொடை ஒரு பெரிய பொறுப்பு என்றும் அதனை இறைவனிடத்தில் ஒப்படைத்து நடத்த வேண்டும் என்றும் கூறினார்.
துறவற நிறுவனங்கள் ஓர் “அற்புதமான மற்றும் மாறுபட்ட சான்றுகளாகத் திகழ்கின்றன, தூயஆவியாரின் செயல்பாட்டிற்கு திறந்த மனதுடன், காலத்தின் அடையாளங்களை வெற்றிகரமாக விளக்கி, புதிய தேவைகளுக்கு புத்திசாலித்தனமாக பதிலளித்த நிறுவனர்கள் மற்றும் நிறுவனர்களுக்கு கடவுள் வழங்கிய பல கொடைகளை அவைகள் பிரதிபலிக்கின்றன என்ற திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்களின் வரிகளையும் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
Comments are closed.