சுவிஸ்சில் ஆனையூரானின் மரியன்னைக்கு மகுடம் நூல் இன்றுமன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களினால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

ஆனையூரான் ஜெராட் அவர்களினால் மரியன்னைக்கு மகுடம் என்னும் அன்னை மரியாள் பற்றி கவிதைகள் அடங்கிய நூல் இன்று மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருள்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களினால் இன்று சூரிச் herz jesu ஆலயத்தில் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

இன்று இவ் ஆலயத்தில் ஞாயிறு காலை மன்னார் ஆயர் தலைமையில் நடைபெற்ற திருப்பலியில் திருப்பீடத்தில் மரியன்னைக்கு மகுடம் நூல் வைக்கப்பட்டு திருப்பலியைத் தொடர்ந்து சுவிஸ் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் இயக்குனர் ஆ. யூட்ஸ் முரளிதரன் அறிமுக உரையைத்தொடர்ந்து,
நூல் ஆய்வுரையை எழுத்தாளர் செல்வம் அவர்கள் சிறப்புற நிகழ்த்தினார்கள்.

தொடர்ந்து மரியன்னைக்கு மகுடம் நூல் ஆயர் அவர்களினால் வெளியீடு செய்யப்பட்டதுடன், ஆயர் அவர்கள் நூல் பற்றி சிறப்புரை நிகழ்தினார் . அதனைத் தொடர்ந்து நூல் ஆசிரியர் ஆனையூரானின் ஜெராட் அவர்களின்
நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவுபெற்றது

நிகழ்வை தொடர்ந்து சூரிச் பணியகத்தின் மக்கள் உட்பட பல கத்தோலிக்க மக்கள் அன்னையின் கவிதை நூல் பெற்றுக்கொண்டார்கள்

Comments are closed.