இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

துயர்நிறை மறையுண்மைகள்.

1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,

இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,

“இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்”. என நமதாண்டாவர் இயேசு கூறுகிறார்.

குடும்ப செபம் செய்யும் குடும்பங்களில் குழப்பங்கள் ஒரு போதும் வருவதில்லை. குடும்ப சமாதானத்திற்கு ஊறு விளைவிக்கும் சாத்தானை குடும்ப செபமாலையால் நாம் விரட்டி அடிக்க வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,

மரியாளின் மாசற்ற திரு இருதயத்திற்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட இந்த ஆகஸ்டு மாதத்தில் நாம் நமது செபமாலை மணிகளால் மரியாளின் மாசற்ற இருதயத்திற்கு ஆறுதல் தரவேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,

ரோமப் பேரரசியும், இன்றையப் புனிதருமான புனித ஹெலெனா, தனது ஜெருசலம் புனிதப் பயணத்தின் போது ஆண்டவர் இயேசு அறையப்பட்ட திருச்சிலுவையைக் கண்டுபிடித்தார்.

கிறித்துவர்களின் அடையாளமாக விளங்கும் திருச்சிலுவை யின் மாட்சியை மக்கள் முழுமையாக உணர்ந்து கொள்ளவும், திருச்சிலுவை பக்தி பெருகிடவும் மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,

வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,

நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.