இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் எடுக்கப்பட்ட தானியல் நூலில், ” எங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் வாழ்த்தப் பெறுவீராக!மாட்சியும் தூய்மையும் நிறைந்த உம் பெயர் வாழ்த்துக்குரியது.” என கூறப்பட்டுள்ளது.
நமது அதிகாலை செபமானது ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்து வாழ்த்துதலோடு துவங்கவும், அது தொய்வில்லாமல் அனுதினமும் நடைபெறவும் இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்வதில்லை. உங்கள் கண்களால் பார்த்துக்கொண்டேயிருந்தும் உணர்வதில்லை.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் தொடர்ந்து கேட்கும் இறைவார்த்தையானது நமது வாழ்வில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தி அதன்படி நாம் நடக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இன்றைய புனிதர் திருத்தந்தை முதலாம் செலஸ்டின் நமது திருவழிபாட்டின் சில பகுதிகளை உருவாக்கியவர்.
ஆலயங்களில் நடைபெறும் திருவழிபாட்டில் கவனச்சிதறல் இல்லாமல் நாம் பக்தியோடு கலந்து கொள்ள இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்பவும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி ஒருவர் மற்றவர்களோடு சகோதர அன்பில் நிலைத்திருக்கவும் இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
குழந்தை இயேசுவுக்காக ஒப்புக்கொடுக்கப்பட்ட வியாழக் கிழமையான இன்று நமது குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக குழந்தை இயேசுவிடம் வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.