இயேசுவுக்கு நன்றியுரைப்பதற்குச் சிறந்தவழி இறைவேண்டலே

இயேசுக் கிறிஸ்துவுக்கு நன்றியுரைப்பதற்குத் சிறந்தவழி என்பது இறைவேண்டலே ஆகும் என கிறிஸ்து பிறப்பு பெருவிழாக்கால டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் இதயங்களிலும் வீடுகளிலும் நுழையவிரும்பும் இயேசுகிறிஸ்துவுக்கு நன்றியுரைப்பதற்கான சிறந்தவழி, இறைவேண்டலேயாகும் என டிசம்பர் 27, செவ்வாய்க்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட டுவிட்டர் செய்தி தெரிவிக்கின்றது.

இறைவேண்டல் குறித்த இந்த டுவிட்டர் செய்தியுடன் திருத்தந்தை இந்த செவ்வாய்க்கிழமைவரை 4583  டுவிட்டர் செய்திகளை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார். திருத்தந்தையின் டுவிட்டர் செய்திகளை 1 கோடியே 89 இலட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.

Comments are closed.