கடவுளை ஆராதிக்க பெரிய இதயம் தேவை -திருத்தந்தை

திருஅவையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்துவின் திருவுடல், திருஇரத்தம் பெருவிழாவை மையப்படுத்தி, ஜூன் 18, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“ரொட்டித்துண்டு போன்று, கடவுள் தம்மை மிகச்சிறியதாக ஆக்குகிறார். அதனாலேயே நமக்கு மிகப்பெரிய இதயம் தேவைப்படுகின்றது. அவ்விதயம் வழியாக, நாம் அவரை அறிந்துகொள்ளவும், ஆராதிக்கவும் அவரைப் பெற்றுக்கொள்ளவும் முடியும்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.

மேலும், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, சிரியாவின் திருப்பீட தூதர் கர்தினால் மாரியோ செனாரி, பிரான்சின் திருப்பீட தூதர் பேராயர் Celestino Migliore, துருக்கியின் திருப்பீடத் தூதர் பேராயர் Marek Solczyński ஆகியோர் இச்சனிக்கிழமை காலையில், திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, தனித்தனியே சந்தித்து உரையாடினர்.

Comments are closed.