இயேசு, நம் காயங்களிலிருந்து நம்மைக் குணப்படுத்துகிறார்

நம் வலிமைகள் மற்றும், பலவீனங்களை அறிந்திருக்கும் இயேசு நம்மைப் பாதுகாப்பதற்கு எப்போதும் தயாராக இருக்கின்றார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வெள்ளியன்று கூறியுள்ளார்.

ஜூன் 17, இவ்வெள்ளியன்று திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள குறுஞ்செய்தியில், இயேசு, நம் நிறைகளையும் குறைகளையும் அறிந்திருக்கிறார், அவர் தம் அளவற்ற அருளால் நம் தவறுகளின் காயங்களிலிருந்து நம்மைக் குணப்படுத்தவும், நம்மைப் பாரமரிக்கவும் எப்போதும் தயாராக இருக்கிறார் என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும், உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைப் பொதுச்செயலர் கர்தினால் மாரியோ கிரெக் அவர்களும், இவ்வெள்ளி காலையில் திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து உரையாடினார் என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

ஜூன் 25, மாலையில் திருத்தந்தை திருப்பலி

இம்மாதம் 26ம் தேதி உரோம் நகரில் துவங்கும் பத்தாவது உலக குடும்பங்கள் மாநாட்டை  முன்னிட்டு, 25ம் தேதி சனிக்கிழமை மாலை 5.15 மணிக்கு, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆண்டின் பொதுக்காலம் 13வது ஞாயிறின் திருவிழிப்பு திருப்பலியை நிறைவேற்றுவார் என்று திருப்பீட செய்தித் தொடர்பகம் அறிவித்துள்ளது.

Comments are closed.