இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 31:19-ல்,
“உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு மானிடர் முன்னிலையில் நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி.” எனக் கூறப்பட்டுள்ளது.
தன்னை மட்டுமே நம்பி தம்மிடம் அடைக்கலம் கொள்ளும் மனிதர்களுக்கு ஆண்டவர் செய்யும் நன்மை மிகுதியானது என்ற உண்மையை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“உங்கள் வலக் கை செய்வது இடக் கைக்குத் தெரியாதிருக்கட்டும். அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம் மறைவாயிருக்கும்; ” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நாம் பிறருக்கு செய்கின்ற உதவிகள் அனைத்தும் எந்தவித எதிர்ப்பார்ப்புமில்லாமல் மறைவாக செய்ய வேண்டிய உதவிகளாக இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இந்த நாள் முழுவதும் நமக்கு தூய ஆவியானவரின் வழிநடத்துதல் கிடைக்கப் பெற வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
பொதுத் தேர்வுகளை எழுதி முடித்த நம் மாணவர்கள் அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இந்த ஆண்டு இறைவன் நமக்கு நல்ல மழையைத் தந்தருள வேண்டி
இந்த ஐந்தாவது 10 மணியை இதற்காக ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.