இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்,
“ஏனெனில் அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார். அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம்.” என புனித பவுலடியார் கூறுகிறார்.
நம் அருகிலேயே ஆண்டவர் இருக்கிறார் என்ற உண்மையை எத்தருணத்திலும் நாம் மனதில் கொண்டிருந்தால் முழுமையாக நாம் பாவங்களிலிருந்து விலகி இருப்போம்.
ஆண்டவர் நம் அருகில் இருக்கிறார் என்பதை எப்போதும் நாம் உணர வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி நற்செய்தி வாசகத்தில்,
“உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
நம் வாழ்நாள் முழுவதும் தூய ஆவியானவர் நமக்குத் துணையாளராக இருக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
மாதாவின் வணக்க மாதத்தில், இன்று விஷேசமாக அனைத்து குடும்பங்களில் கணவன் மனைவிக்காக பிராத்திப்போம். குடும்பத்தில் அன்பும், அமைதியும் நிலைபெறவும் பிள்ளைகளை பக்தி முயற்சியில் வளர்க்கவும் இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
பொதுத்தேர்வுகளை எழுதும் நம் மாணவச் செல்வங்களுக்கு தூய ஆவியானவர் நல்ல நினைவாற்றலையும், ஞானத்தினையும் தந்தருள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
உயிர்த்த கிறிஸ்து நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒளியேற்ற, நம்பிக்கையை ஊட்ட இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.