இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட திருத்தூதர் பணிகள் நூலில், சிறைக்காவலர்
““பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு பவுலும், சீலாவும் அவர்கள், “ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள்” என்றார்கள். என்பதை நாம் வாசித்தோம்.
ஆண்டவரிடத்தில் முழுமையாக நம்பிக்கைக் கொள்வதே மீட்பின் முதல்படி என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில், சிறைக்காவலர்
“கடவுள்மீது நம்பிக்கை கொண்டதால் தம் வீட்டார் அனைவரோடும் சேர்ந்து அவர் பேருவகை அடைந்தார்.” என்பதைக் கண்டோம்.
நம்மோடு கூட நம் வீட்டார் மற்றும் சுற்றத்தார் அனைவரிடத்திலும் ஆண்டவர் நம்பிக்கையை விதைத்து அனைவரும் மீட்படைய நாம் முயற்சி எடுக்க வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்று இடைவிடா சகாய அன்னையின் திருவிழாவைக் கொண்டாடும் நாம் அன்னையின் பக்தி மற்றும் செபமாலையின் முக்கியத்துவம் ஆகியவை மக்களிடையே அதிகரித்திட வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
சில நாடுகளில் பரவிவரும் கொரோனா தொற்று கட்டுக்குள் வரவேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
அந்தோணியாருக்கு ஒப்புக் கொடுக்கப்பட்ட செவ்வாய் கிழமையான இன்று குடும்பங்களில் தீய ஆவியின் தொல்லைகள் நீங்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.