குமுதினி படகில் பயணித்த மக்கள் படுகொலை செய்யப்பட்டதன் 37வது ஆண்டு நினைவுநாள்

நெடுந்தீவு புனித சவேரியார் ஆலயத்தில் பங்குத்தந்தை அருட்திரு விமலசேகரன் அவர்கள் சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுத்தார். தொடர்ந்து குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் மக்களினால் முன்னெடுக்கப்பட்ட மலரஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
ஈழத் தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத மாதமாக அமைந்துள்ள மே மாதத்தில் இப்படுகொலை நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
1985ஆம் ஆண்டு இதே தினத்தில் நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து யாழ் குடாநாட்டை நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த குமுதினி படகினை இலங்கை அரச கடற்படையினர் இடைமறித்து அதில் பயணித்த 31 அப்பாவி பொது மக்களை ஈவிரக்கமின்றி குத்தியும் வெட்டியும் படுகொலை செய்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Comments are closed.