2023ஆம் ஆண்டு வத்திக்கானில் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மன்றத்திற்கான ஆயத்தப்பணிகள்

2023ஆம் ஆண்டு வத்திக்கானில் நடைபெறவுள்ள உலக ஆயர்கள் மன்றத்திற்கான ஆயத்தப்பணிகள் மறைமாவட்ட ரீதியாக நடைபெற்று வருகின்றது.
யாழ். மறைமாவட்டத்தில் நடைபெற்று வரும் ஆயத்தப்பணிகளின் மிக முக்கிய நிகழ்வாகிய மறைமாவட்ட ரீதியான ஆயத்த மாநாடு 14ஆம் திகதி சனிக்கிழமை இன்று யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் நடைபெற்றது.
மறைமாவட்ட குருக்கள் துறவற சபைகளின் பிரதிநிதிகள், பொதுநிலைப் பிரதிநிதிகளை உள்ளடக்கி ஆயர் அவர்களின் தலைமையில் நடைபெற்றுள்ள இம்மாநாட்டில் வினாக்கொத்துக்களுடாக பெறப்பட்ட தரவுகள் தொகுக்கப்பட்டு அது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
இதில் யாழ் மறைமாவட்ட ஆயர். யாழ் மறைமாவட்ட குருமுதல்வர், அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பொதுநிலை பணியாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments are closed.