† இன்றைய புனிதர் (டிசம்பர் 6)

✠ புனிதர் நிக்கலஸ் ✠
(St. Nicholas of Bari)
மரபுகளின் பாதுகாவலர்/ வியக்கவைக்கும் பணியாளர்/ பரிசுத்த தலைமை போதகர்/ மிரா மறைமாவட்ட ஆயர்:
(Defender of Orthodoxy, Wonderworker, Holy Hierarch, Bishop of Myra)
பிறப்பு: மார்ச் 15, 270
பட்டாரா, ரோம பேரரசு
(Patara, Roman Empire)
இறப்பு: டிசம்பர் 6, 343 (வயது 73)
மிரா, ரோம பேரரசு
(Myra, Roman Empire)
ஏற்கும் சபை/ சமயம்:
கத்தோலிக்க திருச்சபை
(Catholic Church)
ஆங்கிலிக்கன் சமூகம்
(Anglican Communion)
திருமுழுக்கு கிறிஸ்தவ எதிர் திருச்சபை
(Baptist Protestant Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
ஓரியண்ட்டல் மரபுவழி திருச்சபை
(Oriental Orthodox Church)
லூதரன் திருச்சபை
(Lutheranism)
மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ எதிர் திருச்சபை
(Methodism)
ப்ரெஸ்பைடெரியன் கிறிஸ்தவ எதிர் திருச்சபை
(Presbyterianism)
சீர்திருத்த கிறிஸ்தவ எதிர் திருச்சபை
(Reformed Church)
நினைவுத் திருவிழா: டிசம்பர் 6
முக்கிய திருத்தலங்கள்:
பசிலிக்கா டி சேன் நிக்கொலா, பாரி, இத்தாலி
(Basilica di San Nicola, Bari, Italy)
பாதுகாவல்:
குழந்தைகள், கடலோடிகள், மீனவர், பொய் குற்றம் சாட்டப்பட்டவர், அடகு பிடிப்போர், மனம்திரும்பிய திருடர்கள், மருந்தாளுநர்கள், ரஷியா, கிரேக்கம், லிவர்பூல், மாஸ்கோ, ஆம்ஸ்டர்டாம், லோர்ரேய்ன், குடிபானம் தயாரிப்பவர், அடகு வியாபாரம் செய்வோர், ஹெலெனிக் கடற்படை (Hellenic Navy)
புனிதர் நிக்கலஸ் என்பது துருக்கியின் மிரா நகரின் புனித நிக்கலசுக்கு வழங்கப்படும் பெயராகும். தனது வாழ்நாளில் இரகசியமாக பரிசுகளை வழங்கும் பழக்கத்தை கொண்டிருந்த இவர், தற்காலத்தில் தமிழில் கிறிஸ்துமஸ் தாத்தா, நத்தார் தாத்தா, என அழைக்கப்படுகிறார். நெதர்லாந்திலும் வடக்கு பெல்ஜியத்திலும் செயிண்ட் நிக்கலஸ் அல்லது “சேன்டகிலாஸ்” என அழைக்கப்படுகிறார்.
ரோமப்பேரரசின் “அனடோலியன் தீபகற்பத்திலுள்ள” (Anatolian peninsula), “பட்டாரா” (Patara) எனும் துறைமுக நகரில், மூன்றாம் நூற்றாண்டில், கிரேக்க குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். இவர், “லிசியாவிலுள்ள” (Lycia) “மிரா” (Lycia) நகரில் வசித்ததாக கூறப்படுகிறது. கி.பி. 325ம் ஆண்டு, ரோமப் பேரரசன் (Roman Emperor) “முதலாம் கான்ஸ்டன்டைன்” (Constantine I) என்பவரின் கேள்விகளுக்கு பதிலளித்த பல்வேறு ஆயர்களில் இவரும் ஒருவராவார். “பைதீனியன்” நகரான “நிசெயாவில்” (Bithynian city of Nicaea) நடந்த முதல் ஆயர்களின் கூட்டத்தில் (First Council of Nicaea) கலந்துகொண்ட 151 ஆயர்களில் இவரும் ஒருவராவார். அங்கே, நிக்கலஸ் ஆரியனிசத்தை (Arian) தீவிரமாக எதிர்த்தார். கிறிஸ்தவ மரபுகளுக்கு பாதுகாவலராக இருந்தார். கிறிஸ்தவ நம்பிக்கை சின்னமான “நிசீன் க்ரீட்’ள்” (Nicene Creed) கையெழுத்திட்ட ஆயர்களில் இவரும் ஒருவராவார். “மதங்களுக்கு எதிரான கொள்கையில் பற்றுடைய” (Heretic) ஆயரான “ஆரியஸ்” (Arius) என்பவரை கௌன்சில் கூட்டத்தினிடையேயே முகத்திலேயே அறைந்தார் என்றும் கூறப்படுகிறது.
சரித்திர ஆளுமையின் தாக்கத்தினால் உருவான கற்பனை பாத்திரம் ஜெர்மனியில் சண்க்ட் நிகொலவுஸ் எனவும் நெதர்லாந்து மற்றும் பிலாண்டர்சில் சிண்டெர்கிலாஸ் எனவும் அழைக்கப்பட்டது. இந்த கற்பனை பாத்திரமே இன்றுள்ள “சேன்டகிலாஸ்” பாத்திரத்துக்கு வித்திட்டது. ‘சிண்டெர்கிலாஸ்’ நெதர்லாந்திலும், பிலாண்டர்சிலும் முக்கியமான விழாவாகும். இந்நாளில் சரித்திர மனிதரான புனிதர் நிக்கலஸ் நினைவுகூறப்பட்டு வணங்கப்படுகிறார்.
புனிதர் நிக்கலஸ், பல நாடுகளினதும் நகரங்களதும் பாதுகாவலராகவும் வழிப்படப்படுகிறார்.

Comments are closed.