குருதியில் பூத்த மலர் அர்ச்.மரிய கொரற்றியின் வரலாறு

மனமாற்றமும் மன்னிப்பும்
எப்பொழுதும் நீ செய்த காரியத்தைத் தவறு என்று உணருகிறாயோ அக்கணமே அதைச் சரிசெய்துவிடு; கால தாமதப்படுத்தாதே. …..ஓஷோ
அலெக்சாண்டர் சிறை வாழ்வில் பல ஆண்டுகளை நிறைவு செய்தும் இரக்கத்தின் ஒரு துளியைக் கூட வெளிக்காட்டவில்லை. எப்போதும் கோபம் நிறைந்த முகத்தோடும், ஆத்திரமும் வெறியும் நிறைந்த மனத்தோடும் தான் இருந்தான். எவரோடும் அன்பாகப் பழகவில்லை. அவனைச் சந்திக்கச் சென்ற அருட்பணியாளரையும், சபையையும், கடவுளையும் பழித்தான். அருட்பணியாளரிடம் கோபவெறி கொண்டு பேசினான். “என்றைக்காவது ஒரு நாள் நீ என்னைத் தேடுவாய். அதை மரிய கொரற்றி செய்வார்” என்று கூறி விட்டு நகர்ந்தார், அருட்பணியாளர்.
அன்று 1910 நவம்பர் மாதம்.
அலெக்சாண்டருக்கு அன்று உறக்கம் வரவில்லை. புரண்டு புரண்டு படுத்துப் பார்த்தான். மனதில் ஏதோ ஒருவித உறுத்தல். ஒரு விதமான தளர்ச்சி அவனை ஆட்கொண்டது. திடீரென மயக்க நிலை ஏற்பட்டு, உறங்கியது போல் இருந்தான். ஒரு சில மணித்துளிகளில் ஏதோ கனவு கண்டவன் போல் திடீரென எழுந்தான். அவன் அடைக்கப்பட்டிருந்த அறைப் பக்கமாய் அங்கும் இங்கும் காவலர்கள் நடந்து கொண்டிருந்தனர். ஒரு வித நடுக்கத்துடனும் பயத்துடனும் காவலர்களை அழைத்தான்.
நடுக்கத்தோடு அலெக்சாண்டர் அழைத்ததைக் கண்டு காவலர்கள் ஓடி வந்தனர்.
‘சிறையில் என்னைச் சந்திக்க வந்த அருட்பணியாளரை அழைத்து வாருங்கள்’ என்றான்.
‘குருவைக் கெட்ட வார்த்தை பேசித் திட்டும் நீ எதற்குப் பார்க்க வேண்டும். அழைக்க முடியாது’ என்றனர்.
அலெக்சாண்டரின் முகம் வாடித் தளர்ந்து போனது. இரவு முழுவதும் ஒரு சிறு குழந்தையைப் போல் தேம்பித் தேம்பித் அழுதான். அவன் மரிய கொரற்றியிடமும், மாதாவிடமும், சேசுவிடமும் சத்தமிட்டுச் செபித்தான். தன்னை மன்னிக்கும் படி திரும்பத் திரும்ப வேண்டினான். கெஞ்சலும், அழுகையும், அலறலுமாக வெளிப்பட்டது அவனுடைய வேண்டுதல். ஒரு மணி நேரத்திற்குள் அவனுள் ஏற்பட்ட மாற்றம் கண்டு அனைவரும் வியந்தனர். எப்படி இது சாத்தியமாயிற்று என்று ஒருவரை ஒருவர் கேட்கலாயினர். இறுதியில் அருட்பணியாளருக்குக் கடிதம் எழுதித் தரும்படி கேட்டனர். அவன் கடிதம் எழுதிக் கொடுத்தான்.
மதிப்பு மிக்க அருட்பணியாளருக்குப் பாவியாகிய அலெக்சாண்டர் எழுதிக் கொள்வது,
‘நான் நடந்து போன செயலை நினைத்து ஆழமாக மனம் வருந்துகிறேன். என் பாவ எண்ணத்திற்கு இணங்குவதைக் காட்டிலும் தன் இரத்தத்தைச் சிந்தியும் தன் புனிதமான கற்பைக் காக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு என்னை எதிர்த்த ஒரு மாசற்ற சிறுமியின் உயிரை வாங்கி விட்டேன். நான் என் பாவத்தைப் பகிரங்கமாக அறிக்கை செய்வதுடன், கடவுளிடமும், கவலையால் துயரப்படும் அந்தக் குடும்பத்தாரிடமும் நான் மன்னிப்பு வேண்டுகிறேன். ஆனால் என் மனத்தில் நம்பிக்கையின் ஒளிக்கதிர் உதயமாகியுள்ளது. எத்தனையோ பாவிகளின் பாவத்தைக் கடவுள் மன்னித்தது போல், நானும் ஒரு நாள் தேவனின் மன்னிப்பைப் பெற்றுவிடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.’
1910, நவம்பர் 10.
இப்படிக்கு,
அலெக்சாண்டர்
செய்தியறிந்த அருட்பணியாளர் மறுநாள் விடியற்காலையில் வந்தார். கெட்ட வார்த்தைகள் பேசித் திட்டிய அலெக்சாண்டர் அருட்பணியாளரின் முன் கண்ணீரோடு நின்றான். எதுவும் அறியாத ஒரு குழந்தையின் முகமாய் அவன் முகம் காட்சி தந்தது. அவன் கொடூர முகம் மலர்ச்சி பெற்றிருந்தது. காரணத்தை அவனே சொன்னான்.
“இரவில் நான் சிறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். நான் படுத்திருந்த அறை மிகவும் சக்திவாய்ந்த ஒளியால் நிறைந்திருந்ததைக் கண்டேன். நான் மிகவும் பயத்தோடு வேகமாய் எழுந்தேன். அக்கணமே எனது அறை லில்லிப் பூக்கள் செழித்து வளர்ந்த ஒரு பூந்தோட்டமாக மாறியது. வெண்ணிற ஆடை அணிந்த தேவதையாய் மரிய கொரற்றி என் அருகில் நடந்து வருவதைப் பார்த்தேன். அவள் அழகையும் முகத்தில் தோன்றிய ஒளியையும் வர்ணிக்கவோ, எடுத்துச் சொல்லவோ முடியாது. என் அருகில் வந்து ஒரு லில்லிப் பூவை என் கையில் தந்தாள். பின் மறைந்தாள். அந்தப் பூவை வாங்கியதும் என் மனம் வருத்தமுற்றது. நான் தளர்ச்சியடைந்தேன். மரிய கொரற்றிக்கு நான் செய்த பாவத்துக்காக வேதனைப் பட்டேன். அந்த நினைவு என்னை விட்டு அகலவில்லை” என்றான்.
அருட்பணியாளரிடம் அவன் பாவ அறிக்கையை சமர்ப்பணம் செய்தபோது அவர், ‘பிதா, சுதன், பரிசுத்த ஆவியின் பெயரால் உன் பாவத்தை மன்னிக்கிறேன்’

Comments are closed.