இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.

மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
தொழிலாளர்களின் பாதுகாவலரான புனித யோசேப்பிடமிருந்து நேர்மை, கடின உழைப்பு, முழு அர்ப்பணிப்பு ஆகியவற்றை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
கடந்த மாதம் முழுவதும் நம்மைக் கண்ணின் மணி போல நம்மைக் காத்து வழி நடத்திய நம் இறைவனுக்கு நன்றியாகவும், பிறந்த இப்புதிய மாதத்தில் நமக்கு இறைவனின் ஆசீர்வாதங்கள் கிடைத்திட வேண்டி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
நம் அன்னைக்கு சிறப்பு சேர்க்கும் இவ்வணக்க மாதத்தில், கொடிய இத்தொற்று நோயிலிருந்து நமது தேசத்தை இறைவன் பாதுகாக்க அன்னை மரியின் பரிந்துரையினை நாடி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் எண்ணற்ற நோயாளிகள் குணமடைய வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
இந்தியாவிலும், பிற நாடுகளிலும் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கட்டுக்குள் வரவேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.