மறைகடந்து மான்பு வளர்த்தவரே மனதார அஞ்சலிக்கின்றேன் ஆயரே – இராம சசிதரக் குருக்கள்

மன்னார் மறை மாவட்ட ஓய்வு நிலை ஆயர்,அதி வணக்கத்துக்குரிய கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு அனைத்து தமிழ் மக்களின் நெஞ்சமும் கனமானது.
யுத்த காலத்தில் இன, மத , மொழி பேதம் பாராமல் மனிதம் மட்டுமே மேன்மை என கருதி அனைத்து மக்களுக்குமான சேவைகளைச் செய்தவர்.

அவர்கள் அனைத்து மதங்களையும் ஒரே மாதிரியாகவே பார்த்து வந்துள்ளார். இதனால் மதத்தலைவர்கள் பிற மதத்தவர்களின் அன்பை அதிகமாக பெற்றவர் இராயப்பு ஜோசப் என்றால் அது மிகையாகாது.

யுத்த காலத்தில் தமிழ் மக்களுக்காக அயராது பாடுபட்டவர். காணாமல்போன உறவுகளுக்காகவும், அரசியல் கைதிகளுக்கும் ஓடி ஓடி உழைத்தவர்..தமிழ் மக்களின் உரிமைக்காக தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர். தமிழ்த்தேசியத்தின்பால் இவர் கொண்ட பற்றுறுதி போற்றுதற்குரியது.
மனித உரிமைமீறல்களுக்காகவும், ஈழத்தில் நடந்தது இனப்படுகொலையெனவும் வாதாடியவர்.
தமிழ் மக்கள் அனைவரும் நிம்மதியாகவும் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டுமென்பதில் உறுதி யாக இருந்தவர்.
இன்று 1-4 2021 வியாழக்கிழமை அருட் தந்தை ஜோசப் ஆண்டகை அவர்கள் இறையெய்தினார்

இவர் 25 வருட காலம் ஆண்டகையாகப் பணியாற்றி பல சேவைகளை ஆற்றியவர்.
சில மரணங்களால் மனிதர்களுக்குத் தான் இழப்பு
சில மரணங்களால் மனிதத்துக்கே இழப்பு!
மானுட நேசிப்பையும் விடுதலை,இறையியலையும்செய்ய சில
மனிதர்களால் தான் முடிகிறது.
அப்படி ஒரு மனிதனின் இழப்புத்தான் இது.
ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அவரது ஆத்மா சாந்தி அடையவும் சமாதானமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தனை செய்வோமாக ! அன்னாரது இழப்பு தமிழினத்திற்குப் பேரிழப்பாகும் !*

நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.
இராம சசிதரக் குருக்கள்
அருள்நிறை
இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய குருக்கள்
Luzern, Switzerland

Comments are closed.