இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைnய செபமாலைக் கருத்துக்கள்

ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
பெரிய வியாழனான இன்றுதான் இயேசு கிறிஸ்து நம் அனைவருக்காகவும் நற்கருணையை ஏற்படுத்தினார்.
கத்தோலிக்கர்கள் நம் அனைவரும் நற்கருணையின் முக்கியத்தை உணர்ந்தவர்களாக, முழு திருப்பலியையும் கண்டு ஆண்டவரின் திருவுடலை உட்க்கொள்ளும் தகுதியுடையவர்களாக அதைப் பெற்று அதன் முழு பேறுபலன்களையும் அடைய வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
ஆண்டவராகிய நம் இயேசு கிறிஸ்து குருத்துவத்தை உண்டாக்கிய இந்நாளில் நமது திருச்சபையில் உள்ள அனைத்துக் குருக்களின் ஆன்ம சரீர நலன்களுக்காக இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சி அறிவித்ததைத் தியானித்து,
இயேசு நம் அனைவருக்கும் சகோதர அன்புக் கட்டளையைக் கொடுத்த இந்நாளில், உலகில் அனைவரையும் எவ்வித பாகுபாடுமின்றி தூய சகோதர உள்ளத்தோடு அன்பு செலுத்திட இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
தன் சீடர்களுக்குப் பாதம் கழுவிய இயேசுவிடமிருந்து தாழ்ச்சி, பணிவிடை செய்தல் ஆகிய நற்குணங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
புதிதாகப் பிறந்திருக்கும் இந்த ஏப்ரல் மாதத்தில் ஆண்டவர் நம் அனைவரையும் அரவணைத்துப் பாதுகாத்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.

Comments are closed.