இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலை

மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
திருநீற்றுப் புதன் என்பது கிறிஸ்தவர்களாகிய நமக்கு பாவக்கழுவாய் நாள் ஆகும். இந்நாள், நாம் ஒவ்வொருவரும் மனம்மாறி, ஆண்டவரிடம் திரும்பி வரவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. நாம் அனைவரும் மனம்மாறி ஆண்டவரிடம் மீண்டும் திரும்ப வேண்டி இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் பல்லவி திருப்பாடல் 51:1-ல் “ஆண்டவரே! இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.” என தாவீது அரசர் கூறுகிறார்.
நாம் ஆண்டவருக்கு எதிராக செய்த அனைத்து பாவங்களையும் இறைவன் மன்னிக்க, இறைவனது இரக்கப் பெருக்கத்தினை இரந்து நாடி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய திருப்பலி இரண்டாம் வாசகத்தில், புனித பவுல் “தகுந்த வேளையில் நான் உமக்குப் பதிலளித்தேன்; விடுதலை நாளில் உமக்குத் துணையாய் இருந்தேன்” எனக் கடவுள் கூறுகிறார். இதுவே தகுந்த காலம்! இன்றே மீட்பு நாள்!” என கூறுகிறார்.
கடவுளோடு ஒப்புரவாக இதுவே தகுந்த காலம் என நாம் உணர்ந்து அவரோடு ஒப்புரவாக இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இந்த தவக்காலத்தில் நாம் செய்யும் செப தப முயற்சிகள் அனைத்தும் நமது பாவங்களுக்குப் பரிகாரமாக அமைய இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
தவக்காலத்தில் செய்யும் ஒறுத்தல்கள், நாம் சந்திக்கும் துன்பங்கள், வலிகள் அனைத்தையும் நாம் ஆன்மாக்களை மீட்க ஒப்புக் கொடுப்போம். இவையனைத்தையும் ஆன்மாக்களுக்காக சகிப்புத்தன்மையோடு ஏற்றுக் கொள்ள இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.

Comments are closed.