அக்டோபர் 24, போலியோ ஒழிப்பு உலக நாள்

போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோய் ஒழிப்பு உலக நாள், “ஒரு நாள், ஒரே நோக்கம்: போலியோ தடுப்பு” என்ற தலைப்பில், அக்டோபர் 24, இச்சனிக்கிழமையன்று, கடைப்பிடிக்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களுக்குக் காரணமான போலியோ நோயைத் தடுப்பதற்கு, உலக அளவில் மேற்கொள்ளப்பட்டுவரும் நலவாழ்வு நடவடிக்கைகளுக்கு, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் நன்றி தெரிவித்துள்ளது.

1980ம் ஆண்டிலிருந்து, உலகில் போலியோ நோய் பாதிப்பு, 99.9 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளது என்றும், இவ்வாண்டு தொடக்கத்தில், ஆப்ரிக்காவின் ஒரு பகுதியில் போலியோ நோய் பாதிப்பு இல்லை என்ற அறிவிப்பு மகிழ்ச்சி தந்தது என்றும், இந்த உலகில் இரு நாடுகளே, இன்னும் அந்நோயால் தாக்கப்படுகின்றன என்றும், WHO நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், உலக அளவில் மூன்றில் இரு வகையான போலியோ நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளன, எனினும், இந்நோயை ஒழிக்கும் முயற்சிகள் இன்னும் முடியவில்லை என்றும், கோவிட்-19 கொள்ளைநோய் காலத்தில், நோய் எதிர்ப்பு சக்தியைத் தொடர்ந்து காப்பது, ஒரு சவாலாகவே உள்ளது என்றும், WHO நிறுவனம் கூறியுள்ளது.

Comments are closed.