பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை திருத்தல யாத்திரிகர்கள் தங்குமிடம்

யாழ்ப்பாண, மறைமாவட்டத்தின் பண்டத்தரிப்பு புனித பத்திமா அன்னை திருத்தலம் இவ் வருடம் 75ஆண்டுகள் நிறைவு யூபிலியை காண்கிறது. அருட்பணி ஹென்றி ஜெலான் அடிகளாரின் முழு முயற்சியில் அன்னையின் சிற்றாலயம் பண்டத்தரிப்பில் உதயமாகி 75ஆண்டுகள் நிறைவில் மகிமை நிறைதிருத்தலமாக விளங்குகிறது. இந்த 75 ஆண்டு நிறைவு யூபிலி நினைவாக யாழ் மறைமாவட்ட ஆயர் அவர்களின் வழிகாட்டுதலோடு பங்கின் பரிபாலகர் அருட்கலாநிதி மைக்கல் APR சவுந்தரநாயகம் அடிகளாரின் முயற்சியினால் யாத்திரிகர்கள் தங்குமிடம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டு அன்னையின் திருக்காட்சி திருநாளில் (13.10.2020) யாழ் ஆயர் அவர்களினால் ஆசிர்வதிக்கப்பெற்று திறந்துவைக்கப்பெற்றது. இவ் தங்குமிடம் அமைய நிதியுதவி வழங்கிய குடும்பங்களுக்கு வாழ்த்துக்கள். புனித பத்திமா அன்னையின் ஆசிர் அனைவரோடும் தங்குக.

Comments are closed.