புனிதத்துவம் என்பது ஒரு கொடையும் கனியும்

புனிதத்துவம் என்பது ஒரு கொடையும் கனியுமாகும் என்ற கருத்தை மையமாக வைத்து இத்திங்களன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புனிதத்துவம் என்பது, இறையருளின் கனி, மற்றும், அதற்குரிய நம் சுதந்திர பதிலுரை. புனிதத்துவம் என்பது ஒரு கொடையும் கனியுமாகும் என்ற சொற்கள், திருத்தந்தை, இத்திங்களன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றன.

மேலும், இஞ்ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘நாம் மீட்கப்பட இறைவனின் இரக்கம் நிறைந்த பார்வை நமக்குத் தேவை என்பதை நாம் உணருமுன்னரே, அந்த கனிவான பார்வை நம்மை வந்தடைவதை இந்நாளின் நற்செய்தி வாசகம் (Lk 19:1-10) நமக்கு காண்பிக்கிறது’ என்ற சொற்கள் பதிவாகியுள்ளன.

Comments are closed.