சிறப்பு மறைப்பணி மாதத்தில் பணிகள் ஆற்றிய அனைவருக்கும் நன்றி

சிறப்பு மறைப்பணி மாதத்தில் மாபெரும் பணியாற்றிய எல்லாருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நன்றி தெரிவித்தார் என்று, திருப்பீட நற்செய்தி அறிவிப்பு பேராயத் தலைவர், கர்தினால் Fernando Filoni அவர்கள், இச்செவ்வாயன்று கூறினார்.

உரோம் நகரிலுள்ள, CIAM எனப்படும், உலகளாவிய மறைப்பணி வழிகாட்டுதல் மையம் நடத்திவரும் கூட்டத்தில் கலந்துகொள்ளும், பாப்பிறை மறைப்பணி கழகங்களின் உறுப்பினர்களிடம் இவ்வாறு கூறினார் கர்தினால் பிலோனி.

உலக அளவில், எல்லாக் கண்டங்களிலும், கத்தோலிக்க குழுக்கள், மறைமாவட்டங்கள், பங்குத்தளங்கள், பக்த சபைகள், திருஅவை அமைப்புகள் போன்ற அனைத்திலும், செபங்கள், திருவழிபாடுகள், சாட்சியங்கள் போன்ற பல நிகழ்வுகளால், இந்த அக்டோபர் சிறப்பு மறைப்பணி மாதம் கொண்டாடப்பட்டது.

திருத்தந்தை 15ம் பெனடிக் அவர்கள் வெளியிட்ட, “Maximum Illud” என்ற திருத்தூது மடலின் நூறாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2019ம் ஆண்டு அக்டோபர் மாதம் சிறப்பு மறைப்பணி மாதமாகக் கொண்டாடப்படுமாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார்

Comments are closed.