ஆலய வழிபாடுகளில் கலந்துகொள்ளும் இளையோர்

ஆலய வழிபாடுகளில் தொடர்ந்து கலந்துகொள்ளும் இளையோர், மனம், மற்றும் உடல் நலத்துடன் செயலாற்றுபவர்களாக இருப்பார்கள் என்று, அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

Barna Group என்ற அமைப்பு, The Connected Generation என்ற பெயரில், 18 வயதிற்கும், 35 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடைய இளையோரிடையே உலகம் முழுவதும் நடத்திய ஆய்வின்படி, வாரம்தோறும் கோவிலுக்குச் செல்லும் இளையோரைவிட, ஏனைய இளையோர், அதிக அளவில் வாழ்வில் பதட்டமான மனநிலையோடு வாழ்வதாகத் தெரியவந்துள்ளது.

மத நடவடிக்கைகளில் ஈடுபாடுடைய கிறிஸ்தவர்களுள், 51 விழுக்காட்டினர் வருங்காலம் குறித்து, நம்பிக்கை கொண்டவர்களாக வாழ்வது தெரியவந்துள்ளதாகவும், மத நம்பிக்கையற்றோரில், 34 விழுக்காட்டினரே வருங்காலம் குறித்த நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், இவ்வாய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலகின் 26 நாடுகளில், 15,000த்திற்கும் மேற்பட்ட இளையோரிடையே நடத்தப்பட்ட ஆய்வில், மதம் சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடுடைய கிறிஸ்தவர்களில் 16 விழுக்காட்டினரே, தாங்கள் தனிமையில் விடப்பட்டதாக  உணர்வதாகவும், அதேவேளை, மத நம்பிக்கையற்றோரில் 31 விழுக்காட்டினர் தனிமையின் கொடுமையை உணர்வதாகவும் தெரிய வந்துள்ளது

Comments are closed.