கிறிஸ்தவ ஒன்றிப்பு உணர்வுடன் கடல்வழி பணிகள்

முதல், 25, வருகிற வெள்ளி முடிய, தாய்வான் நாட்டின், Kaohsiung நகரில், பன்னாட்டு கிறிஸ்தவ கடல்வழி கழகம் ICMA ஏற்பாடு செய்துள்ள ஒரு பன்னாட்டு கூட்டத்திற்கு, திருத்தந்தை வழங்கிய காணொளிச் செய்தி, இக்கூட்டத்தின் ஆரம்ப அமர்வில் காட்டப்பட்டது.

1969ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ICMA கழகம், தன் 50ம் ஆண்டை நிறைவு செய்வதைக் குறித்தும், தன் 11வது உலக மாநாட்டை நடத்துவதைக் குறித்தும் தான் மகிழ்வதாக திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புனித 2ம் ஜான்பால் அவர்களின் ‘Stella Maris’

1997ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான்பால் அவர்கள், கடல்வழி பயணங்கள் மற்றும் பணிகளை மையப்படுத்தி, ‘Stella Maris’, அதாவது, ‘கடலின் விண்மீன்’ என்ற பெயரில் வெளியிட்ட திருத்தூது மடலில் கூறியுள்ள கருத்துக்களை தன் செய்தியில் நினைவுறுத்தி, அதே எண்ணங்களை தான் உறுதிப்படுத்துவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

கடல்வழி பயணத்திலும், கிறிஸ்தவ ஒன்றிப்பிலும் இக்கழகத்தினர் சந்திக்கும் அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் பணியில் வெற்றியடைய தான் வாழ்த்துவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

1969ம் ஆண்டு, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் துவங்கப்பட்ட ICMA கழகம், தற்போது, 125 நாடுகளில், 450க்கும் மேற்பட்ட மையங்களுடன் செயலாற்றுகிறது என்பதும், இக்கழகத்தில் 900த்திற்கும் அதிகமான அருள்பணியாளர்கள் ஆன்மீக வழிகாட்டிகளாகப் பணியாற்றுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

Comments are closed.