உலக மனநல நாள்: தற்கொலை தடுப்பு
உலகில் ஒவ்வொரு நாற்பது விநாடிகளுக்கு, யாராவது ஒருவர் தன் உயிரை மாய்த்துக்கொள்கிறார் என்று, அக்டோபர் 10, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்படும், உலக மனநல நாளையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது ஐ.நா. நிறுவனம்.
தற்கொலை தடுப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை மையப்படுத்தி, இவ்வாண்டு கடைப்பிடிக்கப்படும் உலக மனநல நாளுக்கென வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாற்பது விநாடிகள்” என்ற நடவடிக்கையில் இணையுமாறு உலகினரைக் கேட்டுக்கொண்டுள்ளது, ஐ.நா..
தற்கொலைகளைத் தடுப்பதில் நம் ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டிய ஈடுபாட்டை வலியுறுத்தியுள்ள ஐ.நா. நிறுவனம், இதனைத் தடுப்பதற்கு, நம் ஒவ்வொருவராலும் உதவ முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
WHO உலக நலவாழ்வு நிறுவனத்தின் கணிப்புப்படி, உலகில் ஒவ்வோர் ஆண்டும், எட்டு இலட்சத்திற்கு அதிகமானோர் தற்கொலைகளால் இறக்கின்றனர். 15க்கும், 29 வயதுக்கும் உட்பட்ட இளையோர் மத்தியில் இடம்பெறும் இறப்புகளுக்கு, தற்கொலை முக்கிய காரணமாக உள்ளது.
தற்கொலை இன்று உலகளாவிய நலவாழ்வுப் பிரச்சனையாக மாறியுள்ளது. அறிவியல், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட எல்லாத் துறைகளிலும் மக்களின் மனநலத்தில் கவனம் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
Comments are closed.