சுவிஸ் நாட்டின் அன்னை வேளாங்கண்ணி திருவிழா

சுவிட்சர்லாந்து நாட்டின் லவுசான் மாநில தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீக பணியகத்தின் வருடாந்த திருவிழாவாகிய அன்னை வேளாங்கண்ணி ( ஆரோக்கிய மாதா ) திருவிழாவானது சுவீஸ் ஆன்மிக பணியக இயக்குனர் அருட்பணி டக்ளஸ் மில்ரன் லோகு அடிகளாரின் தலமையில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இத் திருவிழா திருப்பலியானது எதிர்வரும் 29.09.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 14.30(2:30) மணிக்கு லவுசான் புனித யோசேப்பு ( St.Joseph, Avenue de Morges 66, 1004 Lausanne ) என்னும் முகவரியில் அமையப்பெற்றுள்ள ஆலயத்தில் நடைபெறவுள்ளது என்பதனை கத்தோலிக்க இறைமக்களுக்கு அறியத்தருகின்றோம்.

இத் திருவிழா திருப்பலியானது 14:30 மணிக்கு திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி பின்னர் திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருப்பலி முடிவில் அன்னையின் திருச்சுருவ பவனி இடம்பெற்று சிறப்பாசீரும் வழங்கப்படவுள்ளது.

எனவே அன்பான கத்தோலிக்க இறைமக்களே அன்னையின் இறையாசீரை பெற்றுச் செல்ல ஆன்மிக இயக்குனர், மற்றும் பணியக இறைமக்கள் உங்கள் அனைவரையும் அன்புடன் அழைத்து நிற்கின்றார்கள்.

Comments are closed.