மகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் தேடும் மனிதர்கள்

மகிழ்வையும், மேன்மையான வாழ்வையும் உலகின் அனைத்து மனிதர்களும் தேடுகின்றனர் என்பதையே, உலகெங்கும் நிகழும் குடிபெயர்தல் என்ற நிகழ்வு எடுத்துரைக்கிறது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா. அவையின் மக்கள் தொகையும் முன்னேற்றமும் என்ற பணிக்குழு, ஐ.நா. தலைமையகத்தில் ஏற்பாடு செய்திருந்த 51வது அமர்வில், ஐ.நா.அவைக் கூட்டங்களில் திருப்பீட பிரதிநிதியாகப் பங்கேற்கும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், ஏப்ரல் 11, இப்புதனன்று உரையாற்றிய வேளையில் இவ்வாறு கூறினார்.

ஒவ்வொரு மனிதரும், அவரவர் வாழும் நாடுகளில் மதிப்போடும், பாதுகாப்போடும் வாழ்வதை உறுதி செய்வது ஒன்றே, குடிபெயர்தல் என்ற உலகளாவிய நிகழ்வுக்கு நிரந்தரமான தீர்வாக அமையும் என்று பேராயர் அவுசா அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டார்

வத்திக்கான்

Comments are closed.