சகிப்புத்தன்மை ஆண்டு- 2019

சகிப்புத்தன்மை
ஆண்டை அறிவித்த ஐக்கிய அரபு அமீரக அரசுத்தலைவர் Sheikh Khalifa bin Zayed அவர்கள், சகிப்புத்தன்மையை ஊக்குவிப்பதன் வழியாக, கலாச்சாரங்களுக்கு இடையேயும், கலாச்சாரங்களைக் கடந்தும் உரையாடலை வளர்ப்பதில், அமீரகம் முக்கிய இடத்தைக் கொண்டிருக்கும் என்று அறிவித்தார்.

அபு தாபியின் வாரிசு இளவரசர் Sheikh Mohamed bin Zayed Al Nahyan அவர்களின் அழைப்பின்பேரில், 2019ம் ஆண்டு பிப்ரவரியில் அபு தாபிக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நகரில் பிப்ரவரி 4ம் தேதி, மனித உடன்பிறந்தநிலை பற்றிய முக்கிய ஆவணத்தில், Al-Azhar பெரியகுரு Ahmed el-Tayeb அவர்களுடன் சேர்ந்து கையெழுத்திட்டார்.

அடுத்த நாளே, அதாவது பிப்ரவரி 5ம் தேதியே, Saadiyat தீவில், ஆபிரகாம் இல்லம் கட்டும் திட்டத்தை அறிவித்தார், அபு தாபியின் வாரிசு இளவரசர். இந்த ஆபிரகாம் இல்லம், ஒரு கிறிஸ்தவ ஆலயம், ஒரு மசூதி, ஒரு யூதமத தொழுகைக் கூடம் மற்றும், ஒரு கல்வி மையத்தையும் கொண்டுள்ளது. இங்கு பல்வேறு மதத்தினர் வழிபடவும், கற்கவும், ஒன்றுசேர்ந்து உரையாடவும் வாயப்பு அளிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 17ம் தேதி துவங்கியுள்ள 74வது பொது அமர்வு, செப்டம்பர் 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. உலகளாவிய நலவாழ்வு, அணு ஆயுத ஒழிப்பு உட்பட பல்வேறு தலைப்புகள், இப்பொதுப் பேரவையில் விவாதிக்கப்பட்டு வருகின்றன

Comments are closed.