இராக்கினியே எங்களை மற்றொரு இயேசு ஆக்கும் ஆமென்

செபம்

மனித அவதாரம் எடுத்த அன்பே , எங்களிடத்தில் பிறந்தருளும் . எங்களுடைய சதையையும் , இரத்தத்தையும் எடுத்துக் கொண்டு , உமது மனுஷீகத்தை எங்களுக்குத் தந்தருளும் . எங்கள் கண்களை எடுத்துக் கொண்டு உமது பார்வையை எங்களுக்குத் தந்தருளும் . எங்கள் புத்தியை எடுத்துக் கொள்ளும் . உமது பரிசுத்த எண்ணங்களை எங்களுக்குத் தந்தருளும் . எங்கள் பாதங்களைத் தூக்கி , உமது பாதையில் திருப்பியருளும் . எங்கள் கரங்களை ஏந்தி உமது செபத்துக்காக குவித்தருளும்

எங்கள் உள்ளங்களைக் கவர்ந்து அவைகள் நேசிக்க உமது நாட்டத்தை தந்தருளும், செபமாலை இராக்கினியே எங்களை மற்றொரு இயேசு ஆக்கும் ஆமென்

Comments are closed.