அனைத்துலக தண்ணீர் வாரம் – யூனிசெஃப் அறிக்கை

குழந்தைகள், நலமுடன் உயிர் வாழ்வதற்கு, சுத்தமான, பாதுகாப்பான தண்ணீர், அவர்களது அடிப்படை உரிமையாகக் கருதப்படவேண்டும் என்று, ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான யூனிசெஃப், அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 25, கடந்த ஞாயிறு முதல், 30, வருகிற வெள்ளி முடிய, அனைத்துலக தண்ணீர் வாரம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய உலகில், 42 கோடி குழந்தைகளுக்கு, அடிப்படை துப்புரவு வசதிகள் இல்லையென்றும், 21 கோடி குழந்தைகளுக்கு, சுத்தமான நீர் கிடைப்பதில்லை என்றும், கூறப்பட்டுள்ளது.

Water under Fire அதாவது, ‘தீப்பற்றியெரியும் தண்ணீர்’ என்ற பெயருடன், யூனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுத்தமான, பாதுகாப்பான தண்ணீர், குழந்தைகளுக்கு கிடைக்கும் வழிகளைக் குறித்து கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தண்ணீர் பற்றாக்குறையால், மருத்துவமனைகள் மூடப்படுவதும், துப்புரவு வசதிகள் குறைவதும், குழந்தைகளின் நலனுக்கு பெரும் ஆபத்துக்களை உருவாக்குகின்றன என்று, இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை, துப்பாக்கிகளிலிருந்து வெளியாகும் தோட்டாக்களைப் போல் மிகுந்த ஆபத்தானவை என்று கூறும் யூனிசெஃப் அறிக்கை, 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள், தண்ணீர் தொடர்பான குறைகளால், தங்கள் உடல் நலனையும், உயிரையும் இழக்கும் ஆபத்து, ஆண்மையக்காலங்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று கூறுகிறது

Comments are closed.