கடவுளின் அருகாமை தரும் மாற்றம்
கடவுளின் அருகாமை என்பது, நம்மை புதிய மனிதர்களாக உருமாற்றுகின்றது என்ற கருத்தை, இத்திங்களன்று, தன் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
“கடவுளுக்கு அருகாமையில் நடப்பவர்கள், தடுமாறி வீழ்வதில்லை, அவர்கள், புதிதாகத் துவங்கி, மீணடும் முயற்சி செய்து, மீண்டும் கட்டியெழுப்பி, மேலும் முன்னோக்கி நடக்கின்றனர்” என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘வானுலகில் எல்லையற்ற எண்ணிக்கையில் இடங்கள் உள்ளன என இஞ்ஞாயிறு நற்செய்தியில் இயேசு விவரிக்கிறார். ஆனால், அவ்விடத்திற்கு நாம் செல்வதற்கு, இவ்வுலக வாழ்வில், நாம் குறுகியப் பாதை வழியாகச் செல்ல வேண்டியிருக்கும். அதாவது, இறைவனையும், நமக்கு அடுத்திருப்பவரையும் அன்புகூர்வதன் வழியாக. அது எளிதானதல்ல’, என எழுதியுள்ளார்.
Comments are closed.