புதுமை

ரான்சு நாட்டில் லியோன் என்ற மாநகரில் அருளம்மாள் என்ற பத்தியுள்ள கன்னிகை இருந்தார். இவர் புனித ஊர்சுலா சபையைச் சேர்ந்த ஒரு துறவற இல்லத்தின் தலைவியாக இருந்தபோது கொடிய நோயால் அவதியுற்றார். அவர் புனித சூசையப்பரிடம் அதிக பக்தி கொண்டிருந்தார். நோய்வாய்ப்பட்டபோதும் மிக அதிக பக்தியோடு செபிப்பார். நோயின் கொடுமையால் நோயில்பூசுதல் எனும் அருட்சாதனத்தினைப் பெற்று அசைவற்று இருந்தபோது, பிற கன்னியர்கள் அவர் சாகப் போகிறார் என காத்திருக்கும்போது, திடீரென ஒர் அதிசய காட்சியை அவர் படுத்திருந்த அறையில் கண்டனர்.

அதிக ஒளியும், நறுமணமும், இன்னிசையும் உண்டாகி வான்வீடு தெரிந்தது. அப்போது அங்கு தெரிந்த மெத கூட்டத்தினிடையே அவருடைய காவல்தூதர், மகிமைநிறைந்த ஒரு வாலிப தோற்றத்தொடும், தங்கம்பொல் ஒளிவீசும் தலை முடியோடும், கையிலே எரியும் மெழுகுதிரியை பிடித்துக்கொண்டு காட்சி அளித்தார். அவரருகில் சூரிய ஒளியை மங்கச செய்யும் ஒளியுள்ள முகத்தோடும், பூவுலக மன்னர்களைவிட மேலான அலங்காரத்துடனும் புனித சூசையப்பர் வந்தார்.

சூசையின் முகம் இளவயது மனிதனுடைய சாயலாகவும், தலைமயிர் பொன்னிறமாகவும், அணிந்திருந்த ஆடை வெண்மையாகவும், அரசத் தோற்றத்துடனும் தோன்றியது. புனித சூசையப்பர் இரக்கமாய் அக்கன்னிகையிடம், “உன்னை மோட்ச இன்பத்தில் திளைக்க செய்வேன்” என்று கூறி பரிமளத் தைலத்தால் உடலின் பாதிக்கப்பட்ட பகுதியை தடவினார். அவர் தொட்ட உடனே அச்சகோதரி நோய் குணமடைந்து முன்பை விடவும் பலசாலியானார். புனித சூசையப்பர் அவர்களை தயவாய் ஆசிர்வதித்து மறைந்தார்.

உடனே அக்கன்னிகை முழந்தாள்படியிட்டு புனித சூசையப்பரை வணங்கினாள். பின்னர் பிற கன்னியர்களைப்போல் தனக்குரிய கடமைகளை நலமடைந்த சகோதரி தவறாது செய்து வந்தார். ஆனால் அவரை இதுவரை கவனித்து வந்த மருத்துவரோ இன்றோ நாளையோ இவர் இறக்கலாம் என தொடர்ந்து கூறியதால், இப்போது அச்சகோதரிக்கு நடந்துள்ளதை “இது அதிசயம்தான்” என்று எழுதி கொடுத்தார். மேலும் அச்சகோதரி பலவீனப்பட்ட இடத்தில் புனித சூசையப்பர் தடவிய நறுமண தைலத்தை துணியில் துடைத்து வைத்திருந்தார். அந்தத் துணியின் நறுமணம் வீசியதோடு பல நோயாளிகள் அதனைத் தொட்டதும் குணமடைநதனர. எனவே, கிறிஸ்தவர்களாகிய நாம் நமது துன்ப வேளைகளில் அவரைத் தேடி செல்வோம். (3பர, அரு, பிதா)

Comments are closed.