போர்டோவின் திருக்குடும்ப சபை மன்னாரில் தடம் பதித்த 125 ஆவது யூபிலி விழாக் கொண்டாட்டம்.

இன்று காலை 10.30 மணிக்கு 125 ஆவது யூபிலி விழா நிகழ்வுகள் ஆரம்பமானது. மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் மிகவும் அருட்சியாக மன்னார் புனித செபஸ்ரியார் பேராலயத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பின் மன்னார் திருக்குடும்ப சபை இல்லத்தில் சிறிய கலை நிகழ்வும், யூபிலி சிறப்பு மலர் வெளியீடும் இடம்பெற்றது.

மன்னார் புனித செபஸ்தியார் பேராலயபங்கும் இணைந்து இந்நிகழ்வுகளை சிறப்பாக ஒழுங்கு படுத்தியிருந்தார். மன்னார் மறைமாவட்ட ஆயர், குருமுதல்வர், அருட்பணியாளர்கள், அருட்சகோதர சகோதரிகள், பொதுநிலையினர் அனைவர் சார்பாகவும் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் செபங்களையும் தெரிவித்து மகிழ்கின்றோம்.

Comments are closed.