12 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் யாழ்ப்பாண கலாசார நிலையத்துக்கு பிரதமர் விஜயம்
யாழ்ப்பாணத்தில் இந்தியா அரசின் உதவியுடன் பொது நூலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு வருகின்ற யாழ் கலாச்சார மத்திய நிலையப் கட்டுமானப் பணிகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சென்று பார்வையிட்டார்
இதன் போது புனரமைப்பு பணிகளை பார்வையிட்டு அவை தொடர்பில் ஆராய்ந்துள்ளார். மேலும் புனரமைக்க தொடர்பாக இந்திய தூதுவராலய அதிகாரிகள் மற்றும் புனரமைக்க பணிகளை மேற்கொள்கின்ற தரப்புக்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
இங்கு 1800 மில்லியன் ரூபா செலவில் 12 மாடிகளைக் கொண்டதாக அமைக்கப்படும் கலாசார மையமானது 600 பேரை உள்ளடக்ககூடியதான திரையரங்கப் பாங்கிலான திட்ட ஏற்பாடுகளுடன் மண்டபம், இணையத்தள ஆராய்ச்சி வசதிகளுடன் கூடிய பலநோக்கு அமைப்பிலான நூலகம், காட்சி மற்றும் கலைக்காட்சி வெளியிடம், அருங்காட்சியகம் நிறுவன அலகுகள், சங்கீத மற்றும் அதனுடன் இணைந்த இசைக்கருவிகள், நடனங்கள் மொழிகள் உள்ளிட்ட வகு்பபுகளை நடத்துவதற்கான வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும்.
வடக்கிற்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு யாழ் வந்துள்ள பிரதமர் பல இடங்களிற்கும் சென்று பல்வேறு அபிவிருத்திப் பணிகளையும் ஆரம்பித்து வைத்துள்ளார்.
இந்நிலையில் இந்த கலாசார மத்திய நிலையத்தை பிரதமர் பார்வையிட்டதுடன் இவருடன் அமைச்சர் ரிசாத் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ் இந்திய துணைத்தூதர் கே.பாலச்சந்திரன் உட்பட பலரும் சென்று பார்வையிட்டிருந்தனர்.
Comments are closed.