ஆசிய கிறிஸ்தவ இறையியல் வல்லுனர்கள் மாநாடு

இந்தோனேசியாவின் மெதான் நகரில், படைப்பு, மீட்பு ஆகிய இரு இறையியல் தலைப்புக்களில், ஆசிய கிறிஸ்தவ இறையியல் வல்லுனர்களின் ஒன்பதாவது மாநாடு நடைபெற்று வருகிறது.

வட சுமத்ரா மாநிலத்தில் ஆகஸ்ட் 5, இத்திங்களன்று துவங்கியுள்ள இந்த மாநாடு, ஆகஸ்ட் 10, வருகிற சனிக்கிழமையன்று முடிவடையும். இதில், ஆசியா முழுவதிலுமிருந்து, பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சேர்ந்த, 120க்கும் அதிகமான இறையியலாளர்கள், கலந்துகொள்கின்றனர்.

இம்மாநாட்டில் துவக்கயுரையாற்றிய, ஆசிய கிறிஸ்தவ அவையின் நடத்துனரான, பிரிந்த கிறிஸ்தவ சபை பேராயர் Willem Simarmata அவர்கள், இப்பூமியில் மனிதரின் ஆதிக்கத்தினால் வன்முறைக்கு உள்ளாகும் படைப்பைப் பாதுகாக்கும் பணியைப் புதுப்பிக்கிமாறு வலியுறுத்தினார்.

ஆசியக் கண்டத்தின் தற்போதைய சவால்களை எதிர்கொள்வதற்கு, நீதி, அமைதி மற்றும், படைப்பைப் பாதுகாப்பதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டுமென்று வலியுறுத்திய பேராயர் Simarmata அவர்கள், படைப்புப் பணி, மீட்புப் பணியிலிருந்து பிரிக்க முடியாதது என்று கூறினார்.

2019ம் ஆண்டு நவம்பரில், ஆசிய கிறிஸ்தவ பெண்களுக்கென மாநாடு நடத்தப்படும் என்று, ஆசிய கிறிஸ்தவ அவையின் பொதுச் செயலர் அறிவித்தார்

Comments are closed.