நான் பாவங்கீர்த்தனம் செய்து எத்தனை நாட்கள் (மாதங்கள், வருடங்கள் -?)ஆகிறது. வாராவாரம் திருப்பலியில் கலந்துகொண்டு திவ்ய நற்கருணை வாங்குகிறோம். தகுந்த தயாரிப்புடன் பங்கேற்கிறோமா? முன்பெல்லாம் ஒவ்வொரு சனிக்கிழமையும் குருக்கள் பாவசங்கீர்த்தனம் கேட்பார்கள் நாமும் செய்வோம். இப்போது குருக்கள் ரெடி. நாம் ரெடியா? அதுதானே மறுநாள் திருப்பலிக்கான தயாரிப்பு. இப்போதோ அது கேள்விக்குறி.
நிறைய கத்தொலிக்கர்கள் பாவசங்கீர்த்தனம் செய்வதே இல்லை. இது வேதனை.
நாங்கள் ஆண்டவரிடம் நேரிடையாக பாவசங்கீர்த்தனம் செய்கிறோம் என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி செய்தால் எந்த பாவமும் மன்னிக்கப்படாது. இயேசு சுவாமி ஒன்றை ஏற்படுத்தினால் அதைக்கடைபிடித்துதான் ஆக வேண்டும். அதை மீறுபவன் கிறிஸ்தவன் அல்லன். அப்படி சொல்பவர்களின் பேச்சை யாரும் கேட்கவேண்டிய அவசியமும் இல்லை. எப்பேர்பட்ட போதகராக இருந்தாலும் பாவசங்கீர்த்தனம் செய்யாமல் மரித்தால் அவருக்கு பரலோகம் இல்லை. உத்தரிக்கும் ஸ்தலமும் சந்தேகமே. பாவசங்கீர்த்தனமும், செய்த பாவங்களுக்குப் பரிகாரமும் செய்தால் மட்டுமே பரலோகம்.
இயேசு சுவாமி அருளிய இந்த தெய்வீக அருட்சாதனம் இருக்கும் ஒரே இடம் நம் கத்தொலிக்க கிறிஸ்தவம் மட்டும்தான்.
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து பாவசங்கீர்த்தனத்தை எப்படி ஏற்படுத்தினார் பாருங்கள்….
பின்பு அவர்கள்மேல் ஊதி,
“பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவர்களுடைய
பாவங்களை
மன்னிப்பீர்களோ,
அவர்களுக்கு அவை மன்னிக்கப்பெறும்;
எவர்களுடைய பாவங்களை மன்னியாது விடுவீர்களோ, அவை
மன்னிப்பின்றி
விடப்படும்” என்றார்.
அருளப்பர் 20: 22-23
இது இயேசு சுவாமி தம் சீடர்கள் வழியாக ஒவ்வொரு குருவுக்கும் கொடுத்த அதிகாரம்.
இந்த நம் ஆண்டவர் இயேசுவின் வார்த்தையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் பின்னால் செல்லும் கத்தொலிக்கர்கள்படுபாதாளத்தில்தான் விழ வேண்டியது வரும். ஆகையால் நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
Comments are closed.