தூய யாகப்பர் திருச்சொரூபம் திறப்பு விழா வைப்பு-சிலாவத்துறை,
வங்காலை கிராமத்தை சேர்ந்த கலையாசீரியர் திரு.ஜெறோமி .மார்க் அவர்களின் கை வண்ணத்தில் அமையப்பெற்ற தூய யாகப்பர் திருச்சுருபம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிலாவத்துறை கொக்குபடையான் கிராமத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை அவர்களினால் ஆசீர்வதித்து திறந்து வைக்கப்பட்டது.
கொக்குபடையான் கிராமத்தை சேர்ந்தவரும்,தற்போது பிரான்ஸ் நாட்டில் வசிப்பவருமான திரு.திருமதி டெனி அன்றோ தம்பதிகளின் பண உதவியுடன் இச் சுருபம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இச் திருச்சுருபம் மிகவும் பெரியளவில் வடிவமைப்பதற்கு உதவி புரிந்த திரு.திருமதி டெனி அன்றோ குடும்பத்தினருக்கும், இதற்கு பொறுப்பாக இருந்து செயற்பட்ட கொக்குபடையான் பங்குதந்தை வண பிதா டெஸ்மன் அடிகளாருக்கும், கிராம மக்களுக்கும் மறைமாவட்டம் சார்பான நல் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றோம்.
இதற்கு மேலாக இந்த புனித திரு சுருபத்தை இரவு பகல் பாராது மிகவும் அழகிய முறையிலே, பிமாண்டமான முறையிலே வடிவமைத்த வங்காலை கிராமத்தின் சிற்ப கலைஞன் திரு.ஜெறோமி.மார்க் அவர்களுக்கு எமது மறைமாவட்டம் சார்பாகவும், பங்கு குரு சார்பாகவும்,பங்கு மக்கள் சார்பாகவும் நன்றிகளையும், பாராட்டுக்களையும், செபங்களையும் கூறி நிற்கின்றோம்.
Comments are closed.