சிறப்பு திறமையால் ஜப்பான் சென்று திரும்பிய ஈழத்து வேங்கைகள்
ஜப்பான் புகோகா நகரில் நடைபெற்ற ஆசிய பசுபிக் சிறுவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 3 தமிழ் மாணவர்கள் கடந்த 14 ஆம் திகதி பிற்பகல் ஜப்பான் சென்றிருந்தனர்.
இந்நிலையில், தற்போது அவர்கள் தமது ஜப்பான் பயணத்தை இனிதே முடித்துக்கொண்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

இலங்கையில் இருந்து குறித்த மாநாட்டிற்கு 8 மாணவர்கள் சென்றிருந்தனர். அதில் 3 தமிழ் மாணவர்கள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.யாழ்ப்பாணத்தை சேர்ந்த நவாஸ்கன் நதி, மகேந்திரன் திகலொழிபவன், மற்றும் வவுனியாவை சேர்ந்த டீ.ஹரித்திக்கண் சுஜா என்ற மாணவர்களே இவ்வாறு உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் இரு யாழ் மாணவர்களும் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 198 புள்ளிகளைப் பெற்றும், வவுனியா மாணவி 197 புள்ளிகளை பெற்றும் சாதனை படைத்த மாணவர்களாவர்.
Comments are closed.