யாழ். ஊறணி புனித அந்தோனியார் ஆலயத்திற்கு புதிய பணிமனை

இடித்து அழிக்கப்பட்ட பணிமனை மீண்டும் அதே இடத்தில். ..

ஊறணியில் குரு மனைக்குரிய அடிக்கல் நடும் நிகழ்வு.

காங்கேசந்துறை ஊறணியில் அருட்தந்தையர்கள் தங்கியிருந்து பணி புரியும் குரு மனைக்கு அடிக்கல் நடும் நிகழ்வு இன்று – 03.04.2018(செவ்வாய்க்கிழமை) ஊறணி பங்குத்தந்தை அருட்திரு தி.தேவராஜன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
1990 இல் ஏற்பட்ட இடம் பெயர்வின் பின்னர் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த குரு மனை மண்ணோடு மண்ணாய் அழிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இக்குருமனை இருந்த அதே இடத்திலேயே புதிய குருமனை கட்டுவதற்கு தற்போது அடிக்கல் நடப்பட்டு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இக் குரு மனைக் கட்டடத்தை,யாழ் ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் நிதியுதவியுடன் இராணுவத்தினர் கட்டிக் கொடுக்கப்படவிருக்கின்றனர்.

Comments are closed.