தற்கொலை குண்டுத்தாக்குதலில் சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் சீர்திருத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன்
பயங்கரவாதிகளால் ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதலில் முற்றாக சேதமடைந்த நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயம் சீர்திருத்தம் செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் இன்று மீளத்திறக்கப்பட்டது.
கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டு மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களால் காலை 8 மணிக்கு திருப்பலி ஒப்புவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன.
தாக்குதலில் பாதிக்கப்பட்ட பலர் இன்றைய திருப்பலி பூஜையில் கலந்துகொண்டனர்
Comments are closed.